கொரோனா வைரஸ் தாக்கம்--கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 19.6 பில்லியன் ரூபா மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச ரீதியாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிப்படைந்து வரும் நிலையில், இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்கள், திறைசேரி முறிகள் போன்றவற்றை மாற்றுவதில் அதிக கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 19.6 பில்லியன் ரூபா மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் புள்ளி விபரங்களுக்கு அமைய
8.23 பில்லியன் ரூபா பெறுமதியான முறிகள் மாற்றப்பட்டுள்ளன.
இதேபோல கடந்த வாரத்தில் 11.42 பில்லியன் ரூபா அரசாங்க பொறுப்பு பிணைகள் மாற்றப்பட்டுள்ளன.
இந்த நிலை நீடிக்குமானால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியை அடைவதற்கான வாய்ப்பு உள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கை நேரடியாக பொருளாதார தொடர்பினை சீனாவுடன் கொண்டுள்ளதன் காரணமாக நுகர்வோருக்கான பொருட்கள், நடுத்தர பொருட்கள் மற்றும் முதலீட்டுக்கான பொருட்கள் என்பன நேரடியாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இது தவிர சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதும், இலங்கையின் பொருளாதாரத்தை அதிகம் பாதிக்கும் விடயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் அந்நிய செலாவணியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை