கொரோனா பாதுகாப்பதற்கு இஞ்சி வைத்தியம் -அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸில் இருந்து நாட்டு மக்களை பதுகாப்பதற்காக சுதேசிய ஆயர்வேத முறையை பயன்படுத்துவதற்கு ஆயர்வேத மருந்தக கூட்டுத்தாபனம் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இதற்கு தேவையான இஞ்சியை சரியான வகையில் உலர்த்துவதற்கான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருகின்றது.
கொரோனா வைரசுக்கு ஆயர்வேத சுதேசிய மருந்தக கூட்டுத்தாபனம் ரத்த கல்க்கய, புத்தராய கல்க்கய, நவரத்ன கல்க்கய, சீதாராமகுலி ஆகியவற்றை பெருமளவில் சந்தைக்கு விநியோகித்திருப்பதாக திருமதி. சாகல அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
நாட்டில் உற்பத்தியாளர்களிடம் இருந்து உலர்த்தப்படாத இஞ்சியை கொள்வனவு செய்வதற்கு தயாராகியுள்ளது. ஒரு கிலோ இஞ்சி 80 முதல் 90 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலைக்கு வழங்க விருப்பம் உள்ளோர் அது தொடர்பாக 011 2850229
என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும். இஞ்சி மொத்தமாகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை