அதிக விலைக்கு பொருட்களை விட்பவர்கட்க்கு எதிராக நடவடிக்கை
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் சுற்றிவளைப்புகள் இடம்பெறுமென அதிகார சபையின் தலைவர் மெஜரல் ஜெனரல் ஷாந்த திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் அதிகளவான பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பங்களில் உரிய விலைக்கு மேலதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஷாந்த திஸ்ஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்;
கருத்துகள் இல்லை