Breaking News

இந்த விலங்குகளை தூக்கிலிட 7 ஆண்டுகள் ஆகியுள்ளது" : நடிகை வரலட்சுமி வேதனை!

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நல்லவருக்கும்  7 ஆண்டுகள் கழித்து  இன்று அதிகாலை  5.30 மணிக்கு   டெல்லி திகார் சிறையில்  தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்களும் உறுதி செய்தனர். அரை மணி நேரம் அவர்கள் நால்வரும் தூக்கில் தொங்கவிடப்பட்டதாக சிறைச்சாலை டிஐஜி அறிவித்துள்ளார். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 
இந்நிலையில்  நடிகை வரலட்சுமி  சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில்,'நிர்பயா  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார், கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டார். பின்னர் போராடி இறந்தார். அவளுடைய வாழ்க்கையை அழிக்க  7 நிமிடத்திற்கும் குறைவான நேரம் எடுத்த நிலையில் இந்த விலங்குகளை தூக்கிலிட 7 ஆண்டுகள் ஆனது, ஆனால் இறுதியில் நீதி கிடைத்திருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்



கருத்துகள் இல்லை