ஊரடங்கு சட்டத்தை மீறி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் பலி
ஊரடங்கு சட்டத்தை மீறி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 17 வயதான இளைஞர் ஒருவர் நோயாளர் காவு வாகனத்துடன் மோதுண்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேற்று வெயாங்கொட என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
வீதியில் மோட்டார் சைக்கிளை இவர் ஓட்டிச்சென்றபோது காவல்துறையினர் நிறுத்துமாறு கூறியபோதும் அவர் அதனை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இதன்போது தனியார் வைத்தியசாலை ஒன்றின் நோயாளர் காவு வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
குறித்த மோட்டார் சைக்களில் பின்னால் அமர்ந்து சென்றவர் காயங்களுடன் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கருத்துகள் இல்லை