சதொச விற்பனை நிலையம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மீன்ரின்கள்
வவுனியா – நகரில் உள்ள சதொச விற்பனை நிலையம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மீன்ரின்கள் நுகர்வோர் அதிகார சபையினால் நேற்று (19) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீன்ரின்களின் விலை நூறு ரூபாயாக குறைக்கப்பட்ட நிலையில் அவை விற்பனை செய்து முடிவடைந்து விட்டதாக குறித்த விற்பனை நிலையத்தால் கூறப்பட்டது.
இந்நிலையில் பொதுமகன் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட நுகர்வோர் அதிகார சபையினர் குறித்த சதொச விற்பனை நிலையத்தின் களஞ்சிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மீன்ரின்களையும் காசாளர் மேசையின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மீன்ரின்களையும் கைப்பற்றியுள்ளனனர்.
கருத்துகள் இல்லை