தினம் ஒரு திருக்குறள் - Dhinam Oru Thirukural-கற்றதனால் ஆய பயன் என்கொல் வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின்.
கற்றதனால் ஆய பயன் என்கொல் வால் அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின்.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்.) கற்றதனால் ஆய பயன் என்கொல் =
(எல்லா நூல்களையும் கற்றவர்க்கு) அக்கல்வி அறிவினாலாய பயன் யாது?
வால் அறிவன் நற்றாள் தொழாஅர் எனின் = மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
'எவன்' என்னும் வினாப்பெயர் 'என்' என்றாய், ஈண்டு, இன்மை குறித்து நின்றது.
'கொல்' என்பது அசைநிலை.
பிறவிப்பிணிக்கு மருந்தாதலின் 'நற்றாள்' என்றார்.
ஆகமவறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது, இதனாற் கூறப்பட்டது.
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை
கருத்துகள் இல்லை