தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் வேட்பாளராக இம்மானுவேல் ஆனல்ட்
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், இலங்கை தமிழரசுக் கட்சியின் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப்படுகின்றார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவடத்துக்கான வேட்பு மனு தயாரிக்கும் பணி யாழ்.மார்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகப் பணிமனையில் இன்ற முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
தலைவர் மாவை.சேனாதிராஜா முன்னிலையில் இடம்பெறும் இந்த நடவடிக்கையில் யாழ்.மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், வேட்பாளராக இணைக்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவடத்துக்கான வேட்பு மனு தயாரிக்கும் பணி யாழ்.மார்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகப் பணிமனையில் இன்ற முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், கஜதீபன், கு.சுரேன், திருமதி சசிகலா ரவிராஜ், இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் தபேந்திரன் ஆகியோர் வேட்பாளராக களமிறங்குகின்றனர்
கருத்துகள் இல்லை