Breaking News

இலங்கை மக்களுக்கு பிரதமரின் விசேட அறிவிப்பு


வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரையில் 76 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் மக்களை பாதுகாக்கும் வகையிலான பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே இலங்கை மக்களுக்கு மும்மொழிகளிலும் பிரமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்சந்தையில் உணவு, பிற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன்.
முழு இலங்கைக்கும் தடையின்றிய விநியோகம் தொடர்ந்து கொண்டிருக்கும். நுகர்வோரின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நடந்தாயிற்று.
எமது அரசு அனைத்து மக்களினதும் ஆரோக்கியமான வாழ்வினை உறுதி செய்வதற்கான அனைத்தையும் செய்யும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை