கொரோனா அச்சம் மயான அமைதியான கொழும்பு நகரம்
கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பு நகரம் முற்றாக முடங்கியுள்ளது. பொது மக்களின் நடமாட்டம் இல்லாமல் நகரம் வெறிச்சோடிப் போய் காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது.இலங்கையில் தற்போது வரை 28 பேர் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், அரசாங்கம் முக்கியமான திணைக்களங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என அத்தனையும் மூடப்பட்டிருக்கின்றன. இதேவேளை, இன்றைய தினம் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலதிகமாக மக்களை வெளியே செல்ல வேண்டாம் என்றும் அரசாங்கம் இன்று அறிவித்திருந்தது.இந்தநிலையில், எப்பொழுதுமே மக்கள் கூட்டத்தோடு நிரம்பி வழியும் கொழும்பு நகரம் இன்றைய தினம் வெறிச்சோடிப் போயிருந்தமையினை காண முடிகிறது.
கருத்துகள் இல்லை