Breaking News

பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையை நோக்கிப் பயணித்த அம்புலன்ஸ் வாகனம் விபத்து -சாரதி பலி


file image
பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையை நோக்கிப் பயணித்த அம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளானதில், அதன் சாரதி  உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த அம்புலன்ஸ் உதவியாளர் பொல்கொல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களுக்கு மருந்துப் பொருட்களையும் பாதுகாப்பு ஆடைகளையும் கொழும்பிலிருந்து கொண்டு சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை