Breaking News

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநீக்கம்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களில் ஓர் அம்சமாக யாழ் நகர் மற்றும் மத்திய பேரூந்து நிலைய பகுதிகளில் தொற்று நீக்கி மருந்து தெளிக்கும் விசேட செயற் திட்டம் இன்று (21) யாழ் மாநகரசபை சுகாதாரப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த திட்டத்தில் முதல்வர்  இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன் உரிய உதவிஇ ஒத்துழைப்புக்களையும் மாநகர சுகாதாரப் பிரிவினருக்கு வழங்கியிருந்தார்.

இச் செயற்றிட்டத்தில் மாநகர ஆணையாளர் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி மாநகர சுகாதாரப் பிரிவினர் மாநகர உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை