Breaking News

நடிகர் சேதுராமன் மாரடைப்பின் காரணமாக மரணம் சந்தானம் உள்ளிடடட நடிகர்கள் அஞ்சலி


நடிகர் சந்தானத்தின் நெருங்கிய தோழர் சேதுராமன். இவர் சென்னையில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தோல் மருத்துவம் பயின்றவர் ஆவார். மேலும், இங்கு எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி பட்டமும் பயின்றுள்ளார்

இதன்பின்னர் கடந்த 2016 ஆம் வருடத்தில் ZI கிளினிக் என்ற பெயரில் தோல் கிளினிக்கை துவங்கியுள்ளார்நடிகர் சந்தானத்துடைய நெருங்கிய நண்பராக இருந்து வந்த சேதுராமன், கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு வருகை தந்தார்

இதனையடுத்து மேலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில், இவர் தற்போது மாரடைப்பின் காரணமாக  இயற்கையை எய்தியுள்ளார். நேற்று இரவு இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தியுள்ளார்.

இவரது இறப்பை அறிந்த திரையுலகினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக சிலர் மட்டுமே நேரில் இறுதி சடங்கிற்கு வருகை தந்தனர். சேதுவின் நெருங்கிய நண்பரான நடிகர் சந்தானமும் நேரில் வந்திருந்தார்

இவர் தனது நண்பனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதி வரை கூட இருக்கும் பொருட்டு தனது தோழில் நண்பனின் உடலை சுமந்து மின்சார இடுகாட்டிற்குள் எடுத்து செல்வது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. நண்பனின் இறப்பை ஏற்றுக்கொள்ள இயலாத சந்தானத்தின் முகம் சோகம் சூழ்ந்து வாடி காணப்பட்டது

கருத்துகள் இல்லை