ஊரடங்கு சட்டம் தளர்த்தினாலும்மதுபான நிலையங்களை திறக்க தடை!
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மதுபான விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், விவசாயிகள் தமது நடவடிக்கைகளை இடையூறு இன்றி முன்னெடுக்க பொலிஸார் அனுமதி வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவறுத்தியுள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் போதுமான அளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் அது குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, அத்தியாவசியப் பொருட்களை இடையூறு இன்றி கொண்டு செல்ல பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது
கருத்துகள் இல்லை