கொரோனா வைரஸ் தொற்று கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 174 பேர் கிளிநொச்சியில்
கொரோனா வைரஸ் தொற்று கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக
174 பேர் கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த 174 பேரும் இன்று காலை 5 பேருந்துகளில் இரணைமடு விமானப்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குறித்த முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே அவர்களை இரணைமடு விமானப்ப1டை முகாமில் வைத்து 5 நாட்கள் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை