மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதை நடமாடும் சேவையாக மேற்கொள்ளுமாறு கணேஷ் வேலாயுதம் கோரிக்கை
வட மாகாணத்தில் கொரோனோ
தொற்று அதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதை நடமாடும் சேவையாக மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண ஆளுநரிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பிரதான வேட்பாளர்கள் கணேஷ் வேலாயுதம் கோரிக்கை விடுத்துள்ளார்
யாழ்
மாவட்டத்தில் கொரோணா தாக்கம் அதிகரிக்கும் என்ற ஐயப்பாடு நிலவும் சூழ்நிலையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதன் மூலம் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது அன்றாட வாழ்வுக்கான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களில் அதிகளவில் கூடி நிற்பார்கள். ஆதலால் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படும். ஆகவே மக்கள் வீடுகளில் தமது தமக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நடமாடும் விற்பனை நிலையம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும் என அவர் ஆலோசனை
முன்வைத்துள்ளார் . வட மாகாணம் முழுவதும்
அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் ஊர்திகளை ஓட செய்வதன் ஊடாக
மக்கள் தமக்கான தேவையான பொருட்களை அதில் பணத்தை கொடுத்து பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதனால் மக்கள் ஒருவரை ஒருவர் நெருங்குவது சந்திப்பது தவிர்க்கப்படும் என்றும் அது வைரஸ் பரவுவதை குறைப்பதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார் இதனை உடனடியாக அரசாங்க அதிபரும் ஆளுநரும் தலையிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் காலத்தின் தேவை கருதி இந்த நடவடிக்கையினை விரைவாகவும் மேற்கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை