Breaking News

யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை….,




னைவருக்கும் உடனடியாக அவசரமாக இதனை தெரியப்படுத்தவும்….
யாழ்ப்பாணம் செம்மணி பகுதி இளையதம்பி வீதியில் அமைந்துள்ள பிலதெப்பியா கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற வழிபாட்டின் போது சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகர் அவர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
அவர் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்துள்ளார்.விமான நிலையத்திலும் எவ்வித பரிசோதனைகளும் இடம்பெறவில்லை
வழிபாடு இடம்பெற்ற போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது என்பதுடன் ஒலிவாங்கியை கையில் பிடித்திருக்கவே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்
பின்னர் சுவிஸ் நாட்டிற்கு மீள சென்றுவிட்டார்.
தற்போது அவருக்கு கொறோனா தெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சுவிஸ் நாட்டில் சிகிச்சை பெறுகிறார்
அவர் நலம்பெற வேண்டி இங்கு இருக்கும் ஒருசில சபை கிறிஸ்தவ மக்களை வழிபாடு செய்யுமாறு இன்று மாலை மேலிடத்திலிருந்து வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்
இந்த தகவல் பொலிஸ் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு அவ் வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
கொறோனா இருப்பது தெரிந்தும் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து பலரையும் காவு கொள்ள வழிவகுத்த போதகரின் செயல் பலரையும் வேதனைக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கியுள்ளது
அவ் வழிபாட்டில் கலந்து கொண்டவர்களின் நிலைமை மற்றும் அவர்களின் தொடர்ச்சியாக ஏற்பட போகும் விளைவுகள் கொறோனா யாழ்ப்பாணத்தில் பாரிய அழிவை ஏற்படுத்த போகுது என்பது நிச்சயமாகி விட்டது
ஏனெனில் தென் கொரியாவில் 31 ஆவது கொறோனா தொற்று பெண் சிகிச்சைக்கு செல்லாமல் கிறிஸ்தவ தேவாலயம் சென்று வழிபாட்டில் ஈடுபட்டு 1500 பேருக்கு கொறோனா தொற்று ஏற்பட்டது யாரும் மறந்து விட முடியாது
எல்லாவற்றையும் துச்சமாக மிதித்து நடந்த இத்தாலி தற்போது பிணங்களை கூட அகற்ற முடியாமல் சீனாவை விட அதிகமாக பாதிப்பை எதிர்நோக்கி அழுகின்றது….
எனவே இனியாவது கவனமாக செயல்படுவோம்
தயவு செய்து அவ் வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் யாராக இருப்பினும் உடனடியாக உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும்
தனிமை படுத்தபட வேண்டும்
அவர்கள் அனைவரையும் இனங்கண்டு மக்களும் அவர்களிடமிருந்து விலகி நடக்கவும்
எனக்கு ஏற்பட்ட தொற்று என்னை மட்டும் தாக்காது என்னுடன் சேர்ந்து அனைவரையும் தாக்கும் எமது மண்ணையே தாக்கும் என்பது நிச்சயமான உண்மை….
ஒருவரின் உயிரை மட்டும் காவு கொள்வது அல்ல கொறோனா
ஒட்டுமொத்தமாக மிக வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்துகின்றது
ஆபத்து மிகவும் அருகாமையில் வந்து கொண்டிருக்கிறது
வளர்ச்சியடைந்த நாடுகளே சின்னாபின்னமாகி பிணங்களோடு நிற்கின்றன
இனியாவது எமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்து நாங்கள் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்வோம்….

கருத்துகள் இல்லை