Breaking News

இலங்கையில் முதல் கொரோனா தொற்றாளரான சுற்றுலா வழிகாட்டி பூரண குணமடைந்தார்-சீன பாராட்டு


கொரோனா தொற்றுக்குள்ளான முதல் இலங்கையர் குணமாக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளதையடுத்து இலங்கை சுகாதாரத்துறையினரை சீன பாராட்டுள்ளது.
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள முதல் கொரோனா தொற்றாளரான சுற்றுலா வழிகாட்டி   கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பில் சீன தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,
இலங்கையின் சுகாதார மருத்துவர்கள் குழாம், தமது துறைசார் நிபுணத்துவத்திறனைக் காண்பித்திருப்பதுடன் கொரோனா வைரஸ் தொற்று குணப்படுத்தக்கூடியதே என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள்.
அந்த வகையில் மருத்துவக் குழாமிற்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிக்கும் அதேவேளை குணமடைந்த சுற்றுலாப்பயண வழிகாட்டிக்கும் வாழ்த்துக்களைக் கூறுகிறோம் என்ற தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை