Breaking News

யாழ்.அாியாலை- நாவலடி பகுதியில் ஒருவா் மீது வாள்வெட்டு


யாழ்.அாியாலை- நாவலடி பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கள்ளு தவறணையில் குடிகாரா்களுக்கு இடையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாள்வெட்டுக்கு இலக்கானவா் உடனடியாக அங்கிருந்தவா்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன், வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றவரை தேடி வருவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவிக்கின்றனர்

கருத்துகள் இல்லை