உடல் நலக்குறைவால் நடிகர் விசு காலமானார்
உடல் நலக்குறைவால் நடிகர் விசு காலமானார் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக பணியாற்றிய விசு, இயக்குநர், நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளர் என திரைத்துறையின் முக்கிய துறைகளில் திறமை வாய்ந்தவர்.
1941-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என கடைசி வரை பணியாற்றி வந்தவர்.
குடும்பக் கதைகளை மையமாக வைத்து இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் உடன் மன்னன், உழைப்பாளி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் நெற்றிக்கண் படத்தின் கதாசிரியராக பணியாற்றியுள்ளார். அத்திரைப்படம் வெளியாகி வசூலைக் குவித்த நிலையில் தற்போது அந்தப் படத்தை தனுஷ் ரீமேக் செய்யவிருப்பதாக தகவலறிந்து அதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருந்தார் விசு.
கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் கொரோனா அச்சம் காரணமாக அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் இறுதிச்சடங்கு குறித்து குடும்பத்தினர் தரப்பில் விரைவில் தெரிவிக்கப்படும்.

கருத்துகள் இல்லை