உள்ளிருப்புச் சட்டத்தை மீறினால் 30 லட்சம் அபராதம் – பிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி!
பிரான்ஸ் செய்ன்-சன்-துனி மாவட்டத்தில், அரசாங்கத்தின் உள்ளிருப்புச் சட்டத்தினை (Confinement) மக்கள் பெருமளவில் மீறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் காவற்துறையினர் மிகவும் கடுமையான நடவடிக்கையை எடுக்க உள்ளனர். «மற்றவர்களின் உயிரிற்கு ஆபத்து விளைவித்தமை» என்ற குற்றத்தின் அடிப்படையில், உள்ளருப்பச் சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தக் கைது செய்யப்டுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிற்கு ஒரு வருடச் சிறைத்தண்டனையும், 15,000 யூரோ (30 லட்சம் இலங்கை ரூபா) குற்றப்பணமும் விதிக்கப்படும் என பொபினி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை