மட்டக்களப்பு களுதாவளை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் கவலைக்கிடம்
மட்டக்களப்பு களுதாவளை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை சூப்பர் லைன் பேருந்து களுதாவளை கலாசார மண்டபத்தின் முன்னால் வீதியின் அருகில் உள்ள மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இவ் விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த வியாபாரி மற்றும் 22 வயது இளைஞன் ஒருவரும் மற்றும் பேருந்து சாரதியும் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்களில் வியாபாரி உட்பட இருவர் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரின் நிலையும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது என தெரியவருகிறது.

பேருந்தில் பயணித்த பிற பயணிகள் எவருக்கும் பெரும் பாதிப்பு இல்லாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணையினை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்குண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை