Breaking News

நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நேரம் பிற்பகல் 4 மணி வரை அதிகரிப்பு


 யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் தவிர்ந்த 19 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நேரம் 10 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கம்பஹா, கொழும்பு, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம்
நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டு பிற்பகல் 4 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீள அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை