அவசர நிலைமை ஏற்பட்டால் ஒரே நாளில் ஆயிரம் பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை : மகிந்த ராஜபக்ச அறிவிப்பு!!
கொரோனா வைரஸ் சம்பந்தமாக அவசர நிலைமை ஏற்பட்டால், ஒரே நாளில் ஆயிரம் பேரை தனிமைப்படுத்த முடியும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் இதனை கூறியுள்ளார்.
கோவிட் 19 வைரஸ் பரவுவது, இதனால், இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அவசர நிலைமை எதிர்கொள்வது சம்பந்தமாக பிரதமருடன் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில்,
அமைச்சர்கள், செயலாளர், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பிரதானிகள் கலந்துக்கொண்டனர்.
ஆடை உற்பத்தியாளர்கள் சீனாவில் இருந்து சுமார் ஒரு பில்லியன் பெறுமதியான துணிகளை இறக்குமதி செய்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆடை உற்பத்திகளை செய்ய முடியாமல் போயுள்ளது.
இதன் காரணமாக சிறிய மற்றும் நடு தர வர்த்தகர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால், அதற்கு தேவையான முக மூடிகள் உட்பட சுகாதார பா துகாப்புக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை