Breaking News

எந்த வருமானமும் அற்றவர்களிற்கும் உடனடியாக 5 ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை!!-மாவட்டச் செயலாளர்



யாழ்ப்பாணம. மாவட்டத்தில் எந்த வருமானமும் அற்றவர்களிற்கும் உடனடியாக 5 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பணக் குடாநாட்டில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் குடும்பங்கள் தற்போது வாழ்கின்றனர். இவர்களில் அரச ஊழியர்கள் குடும்பம் , ஓய்வூதியர்கள் குடும்பம் என சுமார் 36 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அதனைவிட 76 ஆயிரம் குடும்பங்களிற்கான சமுர்த்தி விநியோகம் இடம்பெறுகின்றது.
இவற்றிற்கு அப்பால் மாற்று வலுவுள்ளோர் கொடுப்பனவாக ரூபா 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு 6 ஆயிரத்து 463 குடும்பங்களிற்கான 5 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுவதோடு முதியோர் கொடுப்பனவு 19 ஆயிரத்து 910 குடும்பங்களிற்கு வழங்கப்படுகின்றது. இவற்றின் அடிப்படையில் மொத்தமாக ஒரு லட்சத்து 28 ஆயிரம் குடும்பங்களுடன் தற்போது விவசாய மற்றும் மீன்பிடி ஓய்வூதியங்களும் 2 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக இம்முறை 4 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டால் ஐரோப்பிய நாடுகள் , கனடாவாழ் உறவுகள் தவிர்ந்த ஏனைய வறுமை மக்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்டம் முழுமையாக வாழும் மக்களில் நாளாந்தம் கூலி வேலை செய்து வாழ்வாதாரம் நடாத்தியவர்களிற்கும் 5 ஆயிரம் வழங்க வளண்டும் என்ற கோரிக்கையுடன் அதற்கான விபரங்களும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்காகவும் குடாநாட்டின் 15 பிரதேச செயலாளர் பிரிவிலும் 16 ஆயிரத்து 514 குடும்பங்கள் வாழ்வதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இவர்களிற்கான அனுமதியை உடன் எதிர்பார்க்கின்றோம் இதற்காக 8 கோடியே 25 லட்சத்து 70 ஆயிரம் ரூபா தேவை எனக் கோரப்பட்டுள்ளது. விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். என்றார்.

கருத்துகள் இல்லை