Breaking News

வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு 21 வருட கால சிறைத் தண்டனை....


தனிமைப்படுத்துவதை நிராகரிக்கும் வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு 21 வருட கால சிறைத் தண்டனையை விதிப்பதற்கு இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நோய்த் தாக்கத்துக்கு உள்ளானவர் தனிமைப் படுத்தப்படாவிட்டால் பொது மக்களுடன் நடமாடுவதன் மூலம் மேலும் பலருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட அவருக்கு அல்லது அவருக்கு எதிராக தனிப்பட்ட கொலைக்கான குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டு ஊடகங்கள் இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளன. 2015ஆம் ஆண்டு எச்..வி. தாக்கத்துக்கு உள்ளானவர்களுக்கு ரோமில் 24 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை மேற்கோள் காட்டி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

இத்தாலியில் புதிதாக கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 12,462 என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 827 ஆகும்.

கருத்துகள் இல்லை