03 நாடுகளின் பயணிகளை நாட்டிற்குள் அழைத்து வரவேண்டாமென அரசாங்கம் அறிவித்துள்ளது
நாளை 14 ஆம் திகதி தொடக்கம் 03 நாடுகளின் பயணிகளை அழைத்து வர வேண்டாம் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை இன்று (13) அறிவித்துள்ளது.
இதன்படி ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து பயணிகளை நாட்டிற்கு அழைத்துவர வேண்டாமென அறிவித்துள்ள சிவில் விமான சேவைகள் அதிகார சபை,
தற்போது சீனாவிற்கு அடுத்தபடியாக குறித்த மூன்று நாடுகளிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அந்நாட்டில் இருந்து வரும் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரவேண்டாம் என அறிவித்துள்ளது
கருத்துகள் இல்லை