Breaking News

நாட்டின் அனைத்து தரத்திலான பாடசாலைகள், சிறுவர் நல காப்பகங்கள், பல்கலைக்கழகங்கள், மூடப்படுகின்றன---நோர்வே


கொரோனா வைரஸின் பரம்பலை கட்டுப்படுத்த நோர்வே, இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னரான மிகப்பெரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது.
மக்களை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்றும், இறப்புக்களை தவிர்க்க முடியாமல் போகலாம் என்றும் பிரதமர் எர்னா சொல்பேர்க் இன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.
இதனடிப்படையில் நாட்டின் பெரும்பாலான சமூக கட்டமைப்புக்கள் மூடப்படுவதோடு மக்கள் நடமாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் அனைத்து தரத்திலான பாடசாலைகள், சிறுவர் நல காப்பகங்கள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன-
அனைத்துவித கலை கலாச்சார நிகழ்வுகளும் ரத்து செய்யப்படும். தலை முடி திருத்தும் சலூன்கள், மசாஜ் நிலையங்கள் அழகியல் சலூன்கள், நீச்சல் தடாகங்கள் அத்தனையும் ஒட்டுமொத்தமாக மூடப்படுகின்றது.
போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும். ஆனால் மக்கள் தேவையில்லாத பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்தியாவசிய சேவை பணியாளர்கள் தவிர்ந்த ஏனையோர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மருத்துவமனைகள், முதியோர் காப்பகங்கள் போன்ற இடங்களுக்கு பொது மக்கள் செல்வதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் படுவதோடு சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை