Breaking News

கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக அறிவித்துள்ளது இந்தியா

இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக இன்று (14) அறிவித்துள்ள மத்திய அரசு, உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ரூ.4 லட்சம் வரை இழப்பீடு வழங்கவும் அனுமதித்துள்ளது.

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.

அவர்கள் அனைவரும் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தின் கலபருகி பகுதியில் ஒரு முதியவர். டெல்லியை சேர்ந்த ஒரு மூதாட்டி என இதுவரை இந்தியாவில் இருவர் கொரோனா தாக்கத்துக்கு பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக இன்று அறிவித்துள்ள மத்திய அரசு கொரோனா பாதிப்பால் இறப்பவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணத் தொகையாக 4 லட்சம் ரூபாய் வழங்கவும் மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

பேரிடர்களை எதிர்கொள்ளும் செலவினங்களுக்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து பயனாளிகளுக்கு எவ்வளவு தொகை வழங்கலாம்? என்பதை நிர்ணயிக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை