Breaking News

இலங்கை வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்

உலகம் முழுவதும் அச்சுறுத்திவரும் கொரோனா தாக்கம் இலங்கையிலும் சடுதியாக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், வைரஸ் வேகமாக பரவுவதனை தடுப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் அரசாங்கம் முடுக்கி விட்டிருக்கிறது.
இலங்கையில் தற்போது வரை 18 நோயாளிகள் இனம்காணப்பட்டுள்ளனர். அதேபோன்று ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், தற்போது கொரோனா நோய்க்கிருமி தொற்றுக்கு உள்ளாகுவோருக்குச் சிகிச்சை அளிக்கவென சிறப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.
பின்வரும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றன.
  • தொற்று நோய்கள் மருத்துவமனை, அங்கொட (IDH)
  • வட கொழும்பு பொது மருத்துவமனை - ராகம
  • கம்பஹா பொது மருத்துவமனை
  • நீர்கொழும்பு பொது மருத்துவமனை
  • தேசிய மருத்துவமனை - கண்டி
  • போதனா மருத்துவமனை - கராபிட்டி
  • போதனா மருத்துவமனை - அனுராதபுரம்
  • போதனா மருத்துவமனை - யாழ்ப்பாணம்
  • போதனா மருத்துவமனை - குருநாகல்
  • மாகாண பொது மருத்துவமனை - இரத்தினபுரி
  • போதனா மருத்துவமனை - மட்டக்களப்பு
  • மாகாண பொது மருத்துவமனை - பதுளை
  •  

கருத்துகள் இல்லை