Breaking News

நாளை திங்கள் கிழமை பொது, வங்கி மற்றும் வணிக விடுமுறை- இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நபரும் பிடியாணை இல்லாமல் கைது '


நாளை திங்கள் கிழமை பொது, வங்கி மற்றும் வணிக விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், தனியார் மற்றும் பொது நிகழ்வுகளில் அதிக கூட்டம் கலந்து கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலாமல் இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, அதிக கூட்டம் கலந்துகொள்ளும் அனைத்து பொது மற்றும் தனியார் கூட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் குறித்து ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு விளக்கமளிக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், 1897 ஆம் ஆண்டின் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்களைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்றும் பொலிசார் எச்சரித்தனர். அதன்படி, தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நபரும் பிடியாணை இல்லாமல் கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மீறுபவர்களை ஜாமீன் இல்லாமல் விளக்கமறியலில் வைக்க முடியும் என்று அந்த அறிக்கை எச்சரித்தது.

கருத்துகள் இல்லை