Breaking News

யாழில் பூசகர் ஒருவரை வாளுடன் கைது


யாழில் பூசகர் ஒருவரை வாளுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு குப்பிளானில் இந்த சம்பவம் நடந்தது.
இரவு பூஜை முடித்து வீடு திரும்பும் போது மற்றொரு கோவிலின் தேவைக்காக வாளை பூசாரி கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரவுச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார், பூசாரியிடம் பயங்கர ஆயுதம் இருப்பதை கண்டு அதிர்ந்து, கைது செய்துள்ளனர்.
அவர் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையம் சென்று, அவரை மீட்டனர்.
மேலும் வாள் மற்றும் பூசகாின் மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை சான்று பொருளாக வைத்து பூசகருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளனா்.

கருத்துகள் இல்லை