Breaking News

கிளிநொச்சியில் வீடு ஒன்றுக்கு விஷமிகளால் தீ வைப்பு

கிளிநொச்சி  அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெங்காதரன் குடியிருப்பில் வீடு ஒன்றுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது
மிகவும் வறுமை கோட்டிற்கு உட்பட்டு கணவனால் கைவிடப்பட்டு இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்ற இக்குடும்பம் நிர்க்கதியான நிலையில் காணப்படுகின்றது.
குடும்பத்தின் வறுமையை கண்டு தொண்டு நிறுவனங்களால் தற்காலிக வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டது. இவ்வாறாக வழங்கப்பட்ட வீட்டிற்கே நேற்று இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.
கட்டாக்காலி நாய் கடிக்கு உள்ளான தனது பிள்ளையை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரவு 11 மணி அளவில் இந்த தீவைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்கு வழங்கப்பட்ட மின்சார கட்டணம் செலுத்தப்படாமையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது நிலையில் வீட்டில் மின்சார ஒழுக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அற்ற நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்க

கருத்துகள் இல்லை