நாடளாவிய ரீதியில் இன்று முதல் 3 நாட்களுக்கு மருந்தகங்கள் இயங்கும்!
நாடளாவிய ரீதியில் அனைத்து மருந்தகங்களையும் மூன்று நாட்களுக்கு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று, நாளை மற்றும் எதிர்வரும் 6ஆம் திகதி ஆகிய தினங்களில் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்யும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதியோர் அடையாள அட்டைகளை பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியுமென பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும், ஓய்வூதியம் பெறுவோர் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் முதியோர் அனுமதி அட்டைகளை ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை