Breaking News

அராலி பிரதேசத்தில் திடீர் உடல் நலக் குறைவு-இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு


அராலி பிரதேசத்தில் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்ட இளைஞனை உரிய நேரத்தில் வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர் ஒத்துழைக்காமையினால் குறித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் கொட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 30 வயதான நாகேந்திரன் புஸ்பராசா என்பவரே உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த இளைஞன் 1 1/2 வருடங்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அருவை சிகிச்சை செய்த நிலையில், குறித்த இளைஞன் தேக ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். எனினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் க்ளினிக் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவசர அம்பியூலன்ஸ் வண்டிக்கு அழைப்பை எடுத்த போது பொதுச் சுகாதார பரிசோதகர் வந்து உறுதிப்படுத்தினால் தான் வண்டியில் ஏற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொதுச் சுதாதார பரிசோதகர் மற்றும் சுகாதார சேவைகள் ஊழியர்கள் இவருக்கு சாதாரண நோய்தான் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று மருந்து வழங்குமாறு தெரிவித்துச் சென்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்து இளைஞர்கள் இருவர் அவரை அராலி கொட்டைக்காடு பிரதேச வைத்தியசாலைக்கு சென்ற போது அவருடை நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து பிரதேச வைத்தியசாலையில் நின்ற அம்பியூலன்ஸ் வண்டியின் உதவியை கேட்டபோதும் நீண்ட நேரத்தின் பின்பே அவ்விளைஞன் அம்பியூலன்ஸில் ஏற்றப்பட்டுள்ளார்.
எனினும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை