ஆபத்தை நோக்கி இலங்கை இதுவரை 1723 தடுத்து வைப்பு
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக நாடு முழுவதும் 12 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலையங்களில் பேர் இதுவரை 1723 தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என இராணுவ ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 11ஆவது இலங்கையரான 46 வயதுடைய ஆணொருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு 7 பேர் மேலதிகமாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் 7 பேரும் இலங்கையர்கள். இவர்கள் இத்தாலியிருந்து இலங்கைக்கு வருகை தந்து, கந்தகாடு தனிமைப்படுத்தப்படும் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை