யாழ் விடுதிகளில் திடீர் சோதனை
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தல் சோதனைக்கு உட்படாமல் விடுதிகளில் தங்கியுள்ளவா்களை அடையாளம் காணும் நடவடிக்கையினை யாழ்.மாநகரசபையினர் ஆரம்பித்திருக்கின்றனர்.வெளிநாடுகளில் இருந்து வரும்போது கொரொனா தடுப்பு மையங்களிற்கு செல்லாது நேரடியாக வந்தவர்களை இனம் கண்டு படையினரின் பொறுப்பில் உள்ள பரிசோதனை மையங்களிற்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைப் பகுதிக்குள் நேற்று மாலை முதல் அதிரடியாக ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் , சுகாதார வைத்திய அதிகாரி , பொலிசார் மாகாண சுகாதார வைத்திய அதிகாரிகள் ஆகியோரிற்கிடையிலான விசேட சந்திப்பின் பின்னர் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் , சுகாதார வைத்திய அதிகாரி , பொலிசார் மாகாண சுகாதார வைத்திய அதிகாரிகள் ஆகியோரிற்கிடையிலான விசேட சந்திப்பின் பின்னர் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக முதல் கட்டமாக யாழ் . நகரின் மத்தியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகளில் திடீர் சோதனை இடம்பெற்றது. இதன் பிரகாரம் தற்போது உலகில் கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படும் நாடுகளில் இருந்து இம் மாதம் வருகை தந்த உள்ளூர் வெளியூர் பயணிகளை இனம்கானும் நடவடிக்கை இடம்பெற்றது. இந்நடவடிக்கையில் நேற்று ஒரே தினத்தில் 7 விடுதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கருத்துகள் இல்லை