Breaking News

விருந்துபசார நிகழ்வில் 18 பேர் கைது-போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


விருந்துபசார நிகழ்வினை முன்னெடுத்த குற்றச்சாட்டுக்காக 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் பேருவளை, மத்தள சந்தியின் பன்சல வீதியில் அமைந்துள்ள ஹேட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 18 பேரில் இரு பெண்களும் உள்ளடங்குவர்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஒன்று கூடல்களை   தவிர்க்குமாறு அரசாங்கம் உத்தர விட்டுள்ளது. இந் நிலையிலேயே அந்த உத்தரவை மீறி செயற்பட்டமைக்காக இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மீது மதுபானம், ஐஸ் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை