Breaking News

கிணற்றுக்குள்தவறி வீழ்ந்த இளம் யுவதி பரிதாபமாக பலி

வீட்டுக் கிணற்றில் தண்ணி அள்ளும் போது கயிறு காலில் தடக்கியதில் கிணற்றுக்குள் தவறி  வீழ்ந்த இளம் யுவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் செம்மணி வீதி நல்லூரடியை சேர்ந்த மதுரகுமார் கஸ்தூரி 25 வயது என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நல்லூரடியில் உள்ள தனது வீட்டில் குறித்த யுவதி நேற்றுமுன்தினம் (17) மாலை கிணற்றில் அள்ளியுள்ளார். இதன்போது கப்பியின் கயிறு காலில் சிக்குண்டத்தில் தண்ணி வாளியுடன் இழுபட்டுள்ளது. இதனால் யுவதி கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார்.
யுவதியின் அவலக் குரலை கேட்ட அயலவர்கள் கிணற்றுக்குள் இருந்து யுவதியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் யுவதி ஏற்கனவே இறந்து விட்ட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்

கருத்துகள் இல்லை