60 குடும்பங்கள், சுகாதார சேவை அதிகாரிகளால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வந்து, புத்தளம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசித்து வருபவர்கள் அடங்கிய 60 குடும்பங்கள், சுகாதார சேவை அதிகாரிகளால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து பெப்ரவரி மாதம் இறுதி வாரத்திலும், மார்ச் மாதம் முதல் வாரத்திலும் இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்தோர், எவ்வித பாதுகாப்பும் இன்றி சுதந்தரமாக சுற்றித் திரிந்து கொண்டதை அவதானித்த பொதுமக்கள் தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக சுகாதார பரிசோதகர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து கிராம உத்தியோகத்தர்கள், பொலிஸாரின் ஒத்துழைப்புக்களுடன் சுகாதாரப் பரிசோதகர்கள் குறித்த நபர்களை சந்திந்துத் தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.
அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களையும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் இரண்டு வாரங்களுக்கு வீட்டிலிருந்து வெளியேறக் கூடாது என சுகாதார அதிகாரிகளால் உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை