மன்னார் வங்காலையில் பாவனைக்கு உதவாத கழிவு தேயிலை களுடன் மூவர் கைது
மன்னார் பகுதியில் உள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி பாவனைக்கு உதவாத கழிவு தேயிலை மூடைகளை வங்காலையில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை (13) இரவு கடற்படையினரும், வங்காலை பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளனர்.
சொகுசு வாகனம் ஒன்றின் பின் இருக்கைகள் அகற்றப்பட்டு பதுக்கி வைக்கப்பட்ட கழிவு தேயிலை மூடைகளை வங்காலையூடாக மன்னார் பகுதிக்கு கொண்டு செல்ல முயற்சித்த போதே வங்காலையில் வைத்து கடற்படையினரும்,பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு வாங்காலை வீதியூடாக வந்த குறித்த சொகுசு வாகனத்தை கடற்படையினர் மற்றும் வங்காலை பொலிஸார் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த சொகுசு வாகனத்தின் இருக்கைகள் அகற்றப்பட்டு சுமார் 8 முடைகளில் அடைக்கப்பட்ட பாவனைக்கு உதவாத 224 கிலோ கிராம் கழிவு தேயிலையை மீட்டுள்ளனர்.
மேலும் குறித்த சொகுசு வாகனத்தில் பயணித்த மூன்று நபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் முசலி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
-கைது செய்யப்பட்டவர்கள் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சொகுசு வாகனம் மற்றும் மீட்கப்பட்ட கழிவு தேயிலை மூடைகளும் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரனைகளை வங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை