வாட்ஸ் அப்பில் வந்து விட்டது டார்க் மோட்!
வாட்ஸ் அப் செயலியில் புது அப்டேட்டாக டார்க் மோட் ஆஃப்ஷன் வந்து விட்டது. வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தும் போது, தொடர்ந்து செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதால், செல்போன் வெளிச்சம் கண் பார்வையை பாதிப்படையச் செய்கிறது.
வயதானவர்களும் வாட்ஸ் அப் உபயோகிக்கும் காலத்தில், இது ஒரு பெரிய குறைபாடாக இருந்து வந்தது. தற்போது இந்த குறைபாட்டைப் போக்கும் விதமாக, வாட்ஸ் அப் செயலி, டார்க் மோட் எனப்படும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இதனால் கண்ணுக்கு வலி ஏற்படுவதை தடுக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த டார்க் மோட் வசதியானது ஏற்கனவே பல செயலிகளிலும், ஐஓஎஸ் மொபைல் போன்களிலும் வந்துள்ளது.
தற்போது இந்த வசதி வாட்ஸ்-ஆப் வெர்ஷன் 2.20.30ல் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது இந்த வசதி வாட்ஸ்-ஆப் வெர்ஷன் 2.20.30ல் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த வசதியை உங்கள் செல்போன்களிலும் கொண்டு வருவதற்கு ப்ளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ்-ஆப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.
பின்பு செட்டிங்க்ஸ் ஆப்ஷனுக்கு சென்றால் சாட்ஸ் என்ற ஆப்ஷன் தேர்வு செய்ய வேண்டும். அதற்குள் டார்க், லைட் என்ற இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், டார்க் மோட் செலக்ட் செய்தால், உங்களது கண் பார்வை

கருத்துகள் இல்லை