எழுதுமட்டுவாள் தெற்கில் தும்புத்தொழிற்சாலை தீயில் எரிந்து நாசம்
தென்மராட்சி கொடிகாமம் எழுதுமட்டுவாள் தெற்கில் உள்ள தும்புத்தொழிற்சாலை ஒன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று 15-03-2020 மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இங்கு எவ்வாறு தீ விபத்து எற்பட்டது என்பது தெடர்பாக தெரியவில்லை.
இவ்வாறு ஏற்பட்ட பாரிய தீ விபத்தை கட்டுப்படுத்த கொடிகாமத்தில் அமைந்துள்ள 52 வது படைப்பிரிவின் படையினர், தீயணைப்புப்படையினருடன் இணைந்து தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை