வரி அனுமதிப் பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வடமாகாண ஆளுனர் விடுத்துள்ள அறிவுத்தலுக்கமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுமக்கள் பிரதேச செயலங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்கும் நோக்கிலும் அவர்களின் நலன் கருதியும் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் (ரக்ஸ்) வழங்கும் செயற்பாடானது தற்காலிகமாக
17.03.2020 தொடக்கம் 31.03.2020 வரை வடமாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இக்காலப்பகுதியில் காலாவதியான வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் செலுத்துபவர்களுக்கான தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது என்பதுடன் இது தொடர்பில் போக்குவரத்து பொலிசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை