Breaking News

மறு அறிவித்தல் வரை மூடப்படும் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம்

தேசிய அடையாள அட்டைகள் சேவை நாளை முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்களை பதிவு செய்யும்  திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை அடுத்து பொது மக்களிடையே அச்சநிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது
இதேவேளை, பாடசாலைகள், பல்வேறு திணைக்களங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தேசிய அடையாள அட்டைகள் சேவை நாளை முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் கட்டாய தேவைகளுக்காக கிராம சேவகர்கள் மூலமாக விண்ணப்பிக்க முடியும் என்றும் அந்த திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது

கருத்துகள் இல்லை