வெளிநாட்டவர்களுடன் உரை யாடிய தாதிக்கு கொரோனா தொற்று
ரயிலில் பொலன்னறுவை சென்று கொழும்பு திரும்பிய பெண் தாதிருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சேர்க்க்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற போது குறித்த ரயிலில் பயணித்த வெளிநாட்டவர்களுடன் பேச்சு நடத்தி சென்றுள்ளார்.
இந்நிலையில் கொழும்பு திரும்பியபோது அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அத்தோடு அவர் பணிபுரியும் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கேகாலை – நெலும்தெனிய பகுதியில் இருந்து தனியார் பஸ்ஸில் கட்டுநாயக்க சென்ற நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அவரும் ஐ.டி.எச் மருத்துவமனையில் சேர்க்க்கப்பட்டுள்ளார்
கருத்துகள் இல்லை