நடிகர் அஜித்குமார் கொரோனா பாதிப்புக்களுக்கு இந்திய மதிப்பில் 1.25 கோடி ரூபாய் நிதியுதவி
கொரோனா
வைரஸ் தாக்கத்திற்கு எதிரான நடவடிக்ககைளுக்கும் மற்றும் கொரோனா பாதிப்புக்களுக்கு எதிரான மக்கள் நலத்திட்டங்களுக்காக நடிகர் அஜித்குமார் இந்திய மதிப்பில் 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
அதாவது,
கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கியுள்ள நடிகர் அஜித், தென்னிந்திய திரைத்துறை தொழிலாளர்களான பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார்.
உலகை
அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை
தடுக்க இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 21 நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த காலக்கட்டத்தில் அரசுக்கு பொருளாதார நெருக்கடி உருவாகி உள்ளது.
இந்நிலையில்
பல்வேறு பிரபலங்களும் நிதியுதவிகளை வழங்கி வருகின்ற நிலையில் தமிழ் திரைப்பட நடிகர் அஜித் இன்றைய தினம் குறித்த நிதியுதவியை வழங்கியுள்ளார்
கருத்துகள் இல்லை