யாழில் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை
பொதுமக்களின்
முறைப்பாட்டின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதென்று அதிகார சபையின் யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
மாவட்ட செயலாளரின் கட்டளைப்படி பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோத்தர்களினால் இன்று யாழ்ப்பாணம், திருநெல்வேலி மற்றும் மானிப்பாய் ஆகிய இடங்களில் வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு 4 வர்த்தக நிலையங்களில் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கும் அதிகமான விலையில் அரிசியை விற்பனை செய்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இது
தொடர்பில் குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை