இலங்கையில் ஏப்ரல் 19 திகதிக்குள் கொரோனா தொற்று முடிவு-சுகாதார அமைச்சர்
உலக
மக்களை மிரட்டி வருகின்ற கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இலங்கையில் எதிர்வரும் 19 ஆம் திகதிக்குள் முடிவுக்குக் கொண்டு வரலாம் என சுகாதார அமைச்சர்
பவித்ரா வன்னியாராச்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனா
தொற்று தொடர்பில் நாளாந்தம் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர்
மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“ஏப்ரல்
19 ஆம் திகதிக்குள் அனைத்து கொரோனா வைரஸ் நோயாளிகளையும் அரசால் அடையாளம் காண முடியும்.
கொரோனா
நோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களில்
80 பேர் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஏனையோர் இவர்களுடன் நெருக்கமான தொடர்புடையவர்களாவர்.
மார்ச்
19 முதல் ஏப்ரல் 19 வரையிலான 30 நாள் காலத்தில் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளை அரசு கண்டறிந்தே தீரும்” – என்றார்.
கருத்துகள் இல்லை