Breaking News

இந்த ஆண்டு க பொ த சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக


இந்த ஆண்டு பொ சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக   விசேட தொவைபேசி இலக்கம் ஒன்றை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போதைய விடுமுறை காலங்களில் வீட்டில் இருந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஏற்படும் சந்தேகங்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்வதற்காக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
னவே மாணவர்கள் தங்களின் பாடநெறிகள் தொடர்பான சந்தேகங்களை 1377 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்வதின் மூலம் ஆலோசனைகளை பெற முடியும். மேலும் இந்த அழைப்புகளுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக கணிதம், விஞ்ஞானம், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கான ஆலோசனைகளை தமிழ் மற்றும் சிங்களம் மொழிகளில் பெறமுடியும்.
இந்த வேலை திட்டத்திற்கு துறைசார் ஆசிரியர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை